ஆபிரகாம் லிங்கனின் முடிவு? தங்களுக்குத் தேவையான பணத்தைக் குவிக்கத் தவறுகின்ற பெரும்பாலான மக்கள், பொதுவாக மற்றவர்களின் அபிப்ராயங்களின் தாக்கத்திற்கு எளிதில் ஆளாகின்றனர். அவர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பதற்கு பதிலாக மற்றவர்களின் அபிப்பிராயங்கள், பத்திரிக்கைச் செய்திகள் போன்றவை தங்கள் முடிவுகளில் தாக்கம் விளைவிக்க அனுமதித்து விடுகின்றனர். அபிப்ராயங்கள் தான் இவ்வுலகில் மிகவும் மலிவானவை. காதுகொடுத்துக் கேட்க ஒருவர் தயாராக இருக்கும் பட்சத்தில், அவரிடம் கூறுவதற்கு ஒவ்வொருவரிடமும் ஏராளமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்களுடைய முடிவுகளை எடுக்கும்போது மற்றவர்களுடைய அபிப்பிராயங்கள் உங்கள் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தினால், உங்கள் ஆழ்விருப்பத்தைப் பணமாக மாற்றும் முயற்சி உட்பட, உங்களது எந்த ஒரு முயற்சியிலும் நீங்கள் வெற்றி பெறமாட்டீர்கள். மற்றவர்களுடைய அபிப்ராயங்களின் தாக்கத்திற்கு நீங்கள் ஆளானால் உங்களுக்கென்று சுயமாக எந்தவோர் ஆழ்விருப்பமும் இருக்காது. நீங்களே உங்களது சொந்த ஆலோசன...