புத்திசாலித்தனமான திட்டமிடுதலின் மூலம் ஒர் ஊருக்கு ரயில்பாதை வந்த கதை: நான் ஒரு சமயம் வடக்கு விர்ஜீனியா மாநிலத்திலுள்ள லம்பர்போர்ட் எனும் சிறிய நகரத்திற்கு முதன்முதலாக விஜயம் செய்தேன்.அந்த சமயத்தில், அந்நகரத்திற்கு அருகேயுள்ள கிளார்க்ஸ் பர்க் எனும் பெருநகரத்திலிருந்து லம்பர்போர்ட்டிற்கு வருவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. ஒன்று பால்டிமோர் & ஒஹையோ ரயில் பாதை; இன்னொன்று லம்பர்போர்ட்டிற்கு மூன்று மைல்களுக்கு அப்பால் அமைந்திருந்த,மின்சாரத்தால் இயங்கிய ட்ராம் ரயிலுக்கான பாதை லம்பர்போர்ட்டிற்கு வருவதற்கு நீங்கள் ட்ராமைத் தேர்ந்தெடுத்தால், அங்கிருந்து யாரேனும் உங்களை தங்கள் காரில் அழைத்து வர வேண்டியிருக்கும் அல்லது மூன்று மைல் தூரம் நீங்கள் நடக்க வேண்டியிருக்கும். கிளார்க்ஸ்பர்க் நகரத்திற்கு நான் வந்து சேர்ந்தபோது, லம்பர்போர்ட்டிக்குச் செல்லும் ரயில் அன்று மதியமே புறப்பட்டுச் சென்றுவிட்டதைக் கண்டறிந்தேன். மாலையில் புறப்படவிருந்த இன்னொரு ரயிலுக்குக் காத்திருக்க விருப்பமின்றி நான் ட்ராமில் சென்றேன். மூன்று மைல் தூர நடைபயணத்தை துவக்கினேன். நான் நடக்கத் துவங்கிய சற்று நேரத்தி...