புத்திசாலித்தனமான திட்டமிடுதலின் மூலம் ஒர் ஊருக்கு ரயில்பாதை வந்த கதை:
நான் ஒரு சமயம் வடக்கு விர்ஜீனியா மாநிலத்திலுள்ள லம்பர்போர்ட் எனும் சிறிய நகரத்திற்கு முதன்முதலாக விஜயம் செய்தேன்.அந்த சமயத்தில், அந்நகரத்திற்கு அருகேயுள்ள கிளார்க்ஸ் பர்க் எனும் பெருநகரத்திலிருந்து லம்பர்போர்ட்டிற்கு வருவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. ஒன்று பால்டிமோர் & ஒஹையோ ரயில் பாதை; இன்னொன்று லம்பர்போர்ட்டிற்கு மூன்று மைல்களுக்கு அப்பால் அமைந்திருந்த,மின்சாரத்தால் இயங்கிய ட்ராம் ரயிலுக்கான பாதை லம்பர்போர்ட்டிற்கு வருவதற்கு நீங்கள் ட்ராமைத் தேர்ந்தெடுத்தால், அங்கிருந்து யாரேனும் உங்களை தங்கள் காரில் அழைத்து வர வேண்டியிருக்கும் அல்லது மூன்று மைல் தூரம் நீங்கள் நடக்க வேண்டியிருக்கும். கிளார்க்ஸ்பர்க் நகரத்திற்கு நான் வந்து சேர்ந்தபோது, லம்பர்போர்ட்டிக்குச் செல்லும் ரயில் அன்று மதியமே புறப்பட்டுச் சென்றுவிட்டதைக் கண்டறிந்தேன். மாலையில் புறப்படவிருந்த இன்னொரு ரயிலுக்குக் காத்திருக்க விருப்பமின்றி நான் ட்ராமில் சென்றேன். மூன்று மைல் தூர நடைபயணத்தை துவக்கினேன். நான் நடக்கத் துவங்கிய சற்று நேரத்தில் பலத்த மழை பெய்யத் துவங்கியது.சேறும் சகதியும் நிரம்பிய அந்தப் பாதை வழியாக நடந்து சென்றதில் லம்பர்போர்ட் நகரை நான் வந்தடைந்தபோது என் காலணிகளும் கால்சட்டையும் சகதியால் போர்த்தப்பட்டு இருந்தன. அந்நகரில் நான் சந்தித்த முதல் நபர் லம்பர்போர்ட் வங்கியின் காசாளர் வீ.எல்.ஹார்னர். நான் சற்று உரத்தக் குரலில் அவரிடம், "ட்ராம் ரயிலுக்கான பாதையை உங்கள் ஊருக்குள் நீட்டித்துக் கொண்டு வந்தால் என்ன? உங்கள் ஊருக்குள் வரும் உங்கள் நண்பர்கள் இப்படிச் சகதிகள் குளிக்க வேண்டியிருக்காது அல்லவா?"என்று கேட்டேன். "இந்நகரின் கோடியில் உயர்ந்த கரைகளைக் கொண்ட ஓர் ஆறு ஓடுவதை நீங்கள் பார்த்தீர்களா?"என்று அவர் என்னிடம் கேட்டார். நான் அந்த ஆற்றைப் பார்த்ததாக பதிலளித்தேன்.பிறகு அவர்,"அதனால்தான் ட்ராம் ரயில் எங்கள் ஊருக்குள் வருவதில்லை. அந்த ஆற்றின்மீது ஒரு பாலம் கட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரு லட்சம் டாலர் செலவாகும். ட்ராம் ரயில் நிறுவனம் அவ்வளவு பணத்தை முதலீடு செய்ய விரும்பவில்லை.ட்ராம் ரயிலை ஊருக்குள் வரவழைப்பதற்கு நாங்கள் பத்து வருடங்களாக முயற்சித்து வந்துள்ளோம்," என்று கூறினார் நான் சற்றுக் கோபமாக," முயற்சித்து வந்துள்ளீர்களா? நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சித்துள்ளிர்கள்?" என்று கேட்டேன் "நாங்கள் அவர்களை எப்படியெல்லாமோ தாஜா செய்து பார்த்து விட்டோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை. அந்தப் பாலம்தான் தடையாக நிற்கிறது. அவர்கள் அதற்கான செலவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மூன்று மைல் தூரம் அந்த ரயில் பாதையை நீட்டிப்பதால் கிடைக்கக்கூடிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், பாலத்தை கட்டுவதற்கான செலவு மிக மிக அதிகம் என்றும், அது தங்களுக்கு கட்டுப்படியாகாது என்றும் அவர்கள் கருதுகின்றனர்,"என்று அவர் பதிலளித்தார். அக்கணத்தில் வெற்றிக் கொள்கைகள் என் உதவிக்கு வந்தன. இவ்வளவு சிரமங்களை விளைவித்துக் கொண்டிருந்த அந்த ஆறு இருந்த இடத்திற்கு என்னுடன் நடந்து வர அவருக்கு சம்மதமா என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் ஏன் கோரிக்கையை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். நாங்கள் அந்த ஆற்றை வந்தடைந்தபோது, என் பார்வையில் பட்ட அனைத்தையும் நான் கணக்கெடுக்கத் துவங்கினேன்.பால்டிமோர் & ஓஹையோ ரயில் பாதைகள் ஆற்றின் இரு பக்கங்களிலும் கரைகளில் மேலும் கீழுமாக ஓடிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். ஆற்றின் குறுக்காக அமைந்திருந்த ஓர் ஒடிசலான சாலைப் போக்குவரத்திற்கான மரப் பாலத்தின் வழியாகத்தான் மக்கள் ஊருக்குள் சென்றாக வேண்டியிருந்தது. நாங்கள் அங்கு நின்று கொண்டிருந்தபோது,அந்தப் பாலத்திற்கு செல்வதற்கான பாதையின் குறுக்கே ஒரு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. பாலத்தை கடந்து செல்வதற்காக அந்த ரயிலின் இரு பக்கங்களிலும் பல குதிரை வண்டிகள் காத்துக்கொண்டிருந்தன.சுமார் 25 நிமிடங்களுக்கு அந்த ரயில் அந்தப் பாதையை மறித்துக் கொண்டிருந்தது இந்தச் சூழலை மனத்தில் கொண்டபோது,ஒரு ட்ராமின் பாரத்தை சுமக்கக் கூடிய அளவுக்கு ஒரு வலுவான பாலத்தை அமைப்பதற்கு மூன்று வெவ்வேறு நபர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு அதிகக் கற்பனை தேவைப்படவில்லை. பால்டிமோர் & ஒஹையோ ரயில்வே நிறுவனம் அதில் நிச்சயமாக ஆர்வமாக இருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஏனெனில், பாலம் கட்டப்பட்டால் அவர்களுடைய ரயில்கள் தடையின்றிப் போய்வரும். ரயில்பாதையும் சாலையும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் ரயில்வே கேட்டையும் எடுத்துவிடலாம். அதன் மூலம், விபத்துக்கான சாத்தியக்கூறுகள் கணிசமாகக் குறையும். உள்ளூர் நகரக் கமிஷனர்களும் இப்பாலத்தில் ஆர்வம் காட்டுவார்கள் என்பது நன்றாகத் தெரிந்தது. ஏனெனில், பொதுமக்கள் வசதியாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் உயர்ந்த தரமான சாலைகளை அமைப்பதற்கு அது அவர்களுக்கு உதவும்.ட்ராம் ரயில் நிறுவனமும் இதில் ஆர்வமாக இருந்தது, ஆனால் பாலத்தைக் கட்டுவதற்கான மொத்தச் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதற்கு அது தயாராக இல்லை. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்று கொண்டிருந்த அந்தச் சரக்கு ரயிலை நான் பார்த்துக்கொண்டு நின்ற வேளையில் இவை அனைத்தும் என் மனத்திற்குள் ஓடின. ஒரு திட்டவட்டமான குறிக்கோள் என் மனத்தில் உதயமாகியது. அதை அடைவதற்கான ஓர் உறுதியான திட்டம் உருவானது. அடுத்த நாள், நான் அந்நகரின் முக்கியப் பிரமுகர்களை ஒன்றுதிரட்டினேன். நாங்கள் பால்டிமோர் மற்றும் ஓஹையோ ரயில்வே நிறுவனத்தின் பிராந்திய நிர்வாக அதிகாரியை அழைத்துப் பேசினோம். ரயில்வே பாதையின் குறுக்காக சென்ற சாலைகளை அகற்றுவதற்கு அப்பாலத்தைக் கட்டுவதற்கான செலவில் மூன்றில் ஒரு பகுதியை அவரது நிறுவனம் ஏற்றுக் கொள்வதற்கு அவரை சம்மதிக்க வைத்தோம். அடுத்து, நாங்கள் நகர நிர்வாகக் குழுவினரை சந்தித்தோம் பாலத்தைக் கட்டுவதற்கான செலவில் மூன்றில் ஒரு பங்கை ஏற்றுக் கொள்ள அவர்கள் மனப்பூர்வமாக சம்மதித்தனர். மீதிப் பணத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்தால், தங்கள் பங்கை கொடுக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் கூறினர். பிறகு நாங்கள் ட்ராம் நிறுவனத்தின் தலைவரை சந்தித்து மூன்றில் ஒரு பகுதி செலவை ஏற்றுக் கொள்வதற்கு அவரையும் நாங்கள் சம்மதிக்க வைத்தோம். ஆனால், ஊருக்குள் ட்ராம் ரயில் வருவதற்கான பாதைகளை அமைக்கும் பணியை அவர் உடனடியாகத் துவக்க வேண்டும் என்று நாங்கள் அவரிடம் ஒரு நிபந்தனை விதித்தோம். அவர் அதை ஏற்றுக் கொண்டார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, பால்டிமோர் & ஓஹையோ ரயில்வே நிறுவனத்திற்கும், ஹாரிஸன் நகர ஆணையருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.பாலத்தை உருவாக்குவதற்கு ஆகும் செலவில் அவர்கள் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வதாக அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருந்தது இரண்டு மாதங்களுக்குப் பிறகு கட்டுமானப் பணி துவங்கியது. அதையடுத்த மூன்று மாதங்களில், ட்ராம் ரயில்கள் லம்பர்போர்ட்டிற்குள் குறித்த நேரங்களில் வந்து போய்க் கொண்டிருந்தன.லம்பர்போர்ட் நகர மக்களுக்கு இது ஒரு பெரும் ஆசீர்வாதமாக அமைந்தது. ஏனெனில், அவர்களால் சௌகரியமாகத் தங்கள் ஊருக்குள் வந்து செல்ல முடிந்தது. இதிலிருந்து எனக்கும் இரண்டு முக்கியமான அனுகூலங்கள் கிடைத்தன. ட்ராம் நிறுவனத்தின் தலைவர் என்னை தனது உதவியாளராக பணியில் சேர்த்துக் கொண்டார். இது பின்னாளில் நான் லாசல் விரிவாக்கப் பல்கலைக்கழகத்தின் விளம்பரத்துறை மேலாளராக ஆவதற்கு வழிவகுத்தது. தனிப்பட்ட சேவையை விற்பதன் மூலம் செல்வத்தை குவிக்க விரும்பும் மக்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் கீழே விபரமாக கொடுக்கப்பட்டுள்ளன. மாபெரும் செல்வங்கள் அனைத்தும் தனிப்பட்ட சேவைகள் அல்லது யோசனைகளின் விற்பனையில் இருந்துதான் துவங்குகின்றன என்பதை அறிவது உங்களுக்கு ஊக்கமளிக்கக்கூடும். நீங்கள் அதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். விற்பதற்கு பொருட்களோ அல்லது வீடுமனைகளோ உங்களிடம் இல்லாத நிலையில், யோசனைகளையும் தனிப்பட்ட சேவைகளும் தவிர, செல்வத்திற்கு பதிலீடாக வேறு எதை உங்களால் கொடுக்க முடியும்?
(Source: Think & Grow Rich)
Comments
Post a Comment